திருப்பூர் : தாய்லாந்தில் கொத்தடிமையா நடத்தப்பட்டு வந்த வாலிபர் சொந்த ஊரான திருப்பூருக்கு திரும்பிய நிலையில், தன்னை மீட்கத் தேவையான உதவிகளை செய்யவில்லை என அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

குளத்துபுதூர் பகுதியில் வசித்து வருபவர் மாரியம்மாள். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த வருடம் ஜனவரி மாதம் மூத்த மகன் மணித்துரை மற்றும் இரண்டாவது மகன் மணிகண்டன் ஆகியோரை அவிநாசி பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற ஏஜெண்ட் தாய்லாந்து நாட்டில் பனியன் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் தலா 2 லட்சத்து 70 ஆயிரம் ருபாய் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், வொர்க் விசா, பெர்மிட் கார்டு போன்றவற்றை எடுத்து தராமல், அங்கு ஓட்டல் வேலையில் சேர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஓட்டலில் முறையான சம்பளம் எதுவும் தராமல் கொத்தடிமையாக வேலை வாங்கி வந்துள்ளனர். மேலும், வொர்க் விசா, பெர்மிட் கார்டு போன்றவை இல்லாததாலும், அவர்களால் அங்கு வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சகோதரர்கள் இருவரையும் ஒரே இடத்தில் வேலைக்கு வைக்காமல் இரு வெவ்வேறு இடங்களில் தங்கி வேலை பார்க்கும்படி செய்துள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது மகனான மணிகண்டனை இங்கு கூட்டி வர 58 ஆயிரம் ரூபாய் கூடுதல் பணம் கொடுத்ததால், இவரின் உரிமையாளர் மணிகண்டனை இந்த மாதம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார். ஆனால், மூத்த மகன் மணித்துரையை சொந்த ஊருக்கு அனுப்ப அவருடைய உரிமையாளர் மறுப்பதாகவும், தனது மகனை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கி வருவதாகவும் கூறிய மாரியம்மாள், மகனை மீட்டுத் தரக் கோரி இது குறித்து மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் இரண்டு முறை தனது கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
இதனிடையே, மாரியம்மாளின் மகன் மணித்துரையை தாய்லாந்து நாட்டில் இருந்து மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், தாய்லாந்தில் கொத்தடிமையாக நடத்தப்பட்டு வந்த மணித்துரை இன்று திருப்பூர் திரும்பினார்.
அவரது வருகை குறித்து தாயார் மாரியம்மாள் கூறியதாவது :- எனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த சில நாட்களில் மகனை பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகத்தினர் கேட்டு சென்றனர், ஆனால், எங்கள் மகனை மீட்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு கட்ட வேண்டிய தொகை குறித்து எந்த தகவலும் இல்லாததால், தற்போது நானே தன் சொந்த முயற்சியில் 60,000 ரூபாயை கட்டி மகனை மீட்டு வந்துள்ளேன். உதவி செய்வதாக தெரிவித்த மத்திய அரசு தாங்கள் எதிர்பார்த்திருந்த உதவியை செய்யவில்லை. இனிமேலாவது தங்கள் மகனை ஏமாற்றி அழைத்துச் சென்ற ரஞ்சித்தை கைது செய்து, வெளிநாடு அழைத்துச் செல்ல கட்டிய பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.