டெல்லி : இந்தியா சுற்றுலாத்துறை இணையதளத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையைச் சேர்க்க வேண்டும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எம்.பி. சண்முகசுந்தரம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறையை இந்திய சுற்றுலாத் துறை இணையதளத்தில் இணைத்து அறிவிப்பு செய்யப்பட வேண்டும் என்றும், மத்திய அரசினுடைய சுற்றுலாத்துறை உயர்மட்ட செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினை அனுப்பி அதிக பயணிகளை ஈர்ப்பதற்காக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
எம்.பி.யின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் பிரஹலாத் சிங், அதிகாரிகள் குழுமத்தை அனுப்பிட இசைவு தெரிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.