கோவை : கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 37 பொறியாளர்கள் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.

குளங்கள் சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, சோலார் மின்நிலையம், மாதிரி சாலைகள் மற்றும் சூயஸ் நிறுவனத்தின் மூலம் 24 மணிநேரமும் குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டப் பணிகளுக்காக கர்நாடகாவைச் சேர்ந்த 37 இளம் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக நகர்ப்புற ஆய்வு நிறுவனத்தின் ஆதரவுடன், தமிழக நகர்ப்புற ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொறியாளர்கள் கோவையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இரண்டு நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் மற்றும் 24 மணிநேர குடிநீர் விநியோக அதிகாரிகள், கோவை மாநகராட்சி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கர்நாடகா இளம் பொறியாளர்கள் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாளையும் இந்த ஆய்வு பணிகளை தொடர்கின்றனர்.

இது குறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக டி.ஐ.யூ.எஸின் பயிற்சி நிகழ்ச்சிகள் நமது மாநிலத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே நடக்கும். வெளி மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம், பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்தவும், அதனை புரிந்து கொள்ளவும் உதவும்," என்றார்.