கோவையில் போதைப்பொருள்‌ தடுப்பு மற்றும்‌ ராக்கிங்‌ தடுப்பு கருத்தரங்கு

கோவை : கோவையில் நடைபெற்ற போதைப்பொருள்‌ தடுப்பு மற்றும்‌ ராக்கிங்‌ தடுப்பு கருத்தரங்கு கூட்டம் நிகழ்ச்சியில் 54 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் நடைபெற்ற போதைப்பொருள்‌ தடுப்பு மற்றும்‌ ராக்கிங்‌ தடுப்பு கருத்தரங்கு கூட்டம் நிகழ்ச்சியில் 54 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 

கோவை மாநகர்‌ காவல்‌ துறை காவல்‌ ஆணையர்‌ அவர்களின் உத்தரவுப்படிகாவல்‌துணை ஆணையர்‌ (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜிசரவணன்‌, காவல்‌ துணை ஆணையர் செல்வகுமார்‌, பெருமாள்‌, காவல்‌ துணை ஆணையர்‌, குற்றப்பிரிவு ஆகியோர்‌ முன்னிலையில்‌ கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அலுவலக வளாகத்தில்‌ தேசிய மாணவர்படை மற்றும்‌ தேசிய சமுதாய பணி ஒருங்கிணைப்பாளர்கள்‌ ஆகியோருக்கான போதைப்பொருள்‌ தடுப்பு மற்றும்‌ ராக்கிங்‌ தடுப்பு கருத்தரங்கு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில்,‌ கோவை மாநகரத்திற்குட்பட்ட 54 கல்லூரிகளில்‌ இருந்து சுமார்‌ 150 பேர்‌ கலந்து கொண்டனர். கோவை மாவட்ட போதை பொருள்‌ துப்பு பிரிவினரும்‌ நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டனர்‌, கருத்தரங்க கூட்டத்தில்‌ கல்லூரிகளில்‌ ராக்கிங்‌ நடைபெறுவதை தடுப்பது, அது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம்‌ ஏற்படுத்துவது, ராக்கிங்கில்‌ ஈடுபடுபவர்கள்‌ மீது சட்ட நடவடிக்கை எடுப்பது போன்றவை பற்றி கருத்துரை வழங்கப்பட்டது. போதைப்‌ பொருள்‌ தடுப்பு குறித்த விழிப்புணர்வும்‌ வழங்கப்பட்டது. மேலும்,‌ போதைப்‌ பொருள்‌ பற்றிய தகவல்களை அளிக்க கோவை மாநகர போதைப்பொருள்‌ தடுப்பு தனிப்பிரிவிற்கென பிரத்யேக

அலைபேசி எண்‌ணான 6484200100 என்ற காவல்துறை ஆணையர்‌ வெளியிட்டார்‌. 

அனைத்து கல்லூரிகளிலும்‌ ராக்கிங்‌ தரப்பு கமிட்டி மற்றும்‌ போதை பொருள்‌தடுப்பு கமிட்டி ஆகியவற்றை உருவாக்கி கண்காணிக்க கேட்டுக்‌ கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்ட கல்லூரி பேராசியர்கள்‌ விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்‌. இந்த நிகழ்ச்சியில்‌ பேசிய மனநல ஆலோசகர்‌ டாகடர்‌, மோனி,‌ மாணவர்களின்‌ மனநலன்‌ அறிந்து செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கினார்‌.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...