பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி கோவையில் சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி கோவையில் சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பதைக் கண்டித்தும், மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தியும், காலிப்பணியிடங்கள் அனைத்தையும் தினக்கூலி மற்றும் ஒப்பந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், மலக்குழி மரணங்களைத் தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும், தூய்மைப்பணியாளர்களிடம் அராஜகமாக நடந்து கொள்ளும் மாநகராட்சி மேற்பார்வையாளர்களின் நடவடிக்கையைக் கண்டித்து சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கணி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் கே. ரத்தினகுமார் உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி சி.ஐ.டி.யூ. மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகி ஜோதிகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கணேசன், கனகராஜ், காத்தவராயன் உள்ளிட்ட கோவை மாநகராட்சி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஜி.ஓ. 348-ஐ அமலாக்க வேண்டும், துப்புரவு தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். சலுகை ஏற்படுத்தவும், ஒப்பந்த தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ. 624-ஐ வழங்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...