கோவை : குடிநீர் திட்டப்பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு ஓராண்டான நிலையில், பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நல்லாம்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், குடிநீர் திட்டப் பணிகளும், சாலைப் பணிகளும் முடிவடையாமல் ஓராண்டுக்கும் மேலாக அந்தப் பகுதி மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை வியாபாரம் செய்ய முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலையில் கொட்டப்பட்டுள்ள எம்சாண்ட் மணல் காற்று அடித்தாலும், வாகனங்கள் சென்றாலும் சாலையில் செல்பவர்களின் முகத்தில் வாரி இரைக்கிறது. ஆகையால், இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ,ஜே. உசேன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து நேரில் வந்த காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரி கலாவதி, உடனடியாக இந்த சாலையை சரி செய்வதாக உறுதி அளித்த பிறகு மறியல் கைவிடப்பட்டது.