கடத்தூர் குளத்தை சீரமைப்பது குறித்து ஜே.சி.பி. உரிமையாளர்களுடன் ஆலோசனை

கோவை : அன்னூர் அருகே உள்ள கடத்தூர் குளத்தை சீரமைப்பது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், ஜே.சி.பி. உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

கோவை : அன்னூர் அருகே உள்ள கடத்தூர் குளத்தை சீரமைப்பது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், ஜே.சி.பி. உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். 



கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கடத்தூர் குளம் என்கிற காட்டம்பட்டி குளம். சுமார் 120 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குளம் கடந்த 30 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. கடத்தூர் குளத்தை புத்துயிரூட்டுவதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், நீர்வழிப்பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மூலம் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 



அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 7) நீர் வழிப்பாதைகளை சரி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான தன்னார்வலர்களும், ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, காட்டம்பட்டி குளத்திலிருந்து கலங்கல் பகுதி வரை நீர்வழிப்பாதையை பார்வையிட்டனர். பின்னர், ஜே.சி.பி. வாகனம் மூலம் செய்ய வேண்டிய வேலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...