பணம் கொடுத்தால் பத்திரிகையாளர் ஆகலாம் என ஏமாற்றும் பெண்மணி..! உஷார்!

கோவை : கோவையில் பத்திரிக்கையாளராக பணியாற்ற ஆசையா..? என விளம்பரம் செய்து பெண் ஒருவர் மோசடி செய்யும் சம்பவம் ஊடகத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் பத்திரிக்கையாளராக பணியாற்ற ஆசையா..? என விளம்பரம் செய்து பெண் ஒருவர் மோசடி செய்யும் சம்பவம் ஊடகத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்கள் அதிக அளவில் உள்ள நிலையில், சமூக வலை தள சேனல்களும் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பணம் கொடுத்தால் பத்திரிகையாளர் ஆகலாம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வாட்ஸ் அப், இ-மெயில் மூலமாக பத்திரிகையாளர் ஆக வேணுமா..? எங்களை அணுகவும் என விளம்பரம் செய்து பத்திரிகையாளர் ஆக வேண்டும் என நினைப்பவர்களிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஒருவரை தொடர்பு கொண்ட ஒரு பெண்மணி, நீங்கள் 4,000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உங்களது மாவட்டத்திலேயே நிருபராக பணியமர்த்தப்பட்டு, உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும், உங்களுக்கு 600 ரூபாய் தள்ளுபடி 3,500 ரூபாய் கொடுத்தால் போதும் என தேன் கலந்த குரலில் பேசி உள்ளார். 

இது குறித்து அந்த நபர் நம்மிடம் கூறியபோது, மேலும் சிலர் நிருபராக பணியாற்ற விரும்புவதாகக் கூறி இணைப்பு பெற்று தாருங்கள் எனக் கூறப்பட்டது.அலைபேசியில் பேசிய அந்த பெண்ணிடம், பணம் செலுத்தப்பட்டால், எப்போது அடையாள அட்டை கிடைக்கும்..?, என்ன மாதிரி செய்திகள் அளிக்க வேண்டும்..? உள்ளிட்ட தொடர் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அந்தப் பெண்ணும், சளைக்காமல் பதில் அளித்துள்ளார். அதாவது, டெல்லியில் தங்களது அலுவலகம் உள்ளதாகவும், யூ-டியூப் சேனல் என்பதால் என்ன வேண்டுமாலும் நீங்கள் அனுப்பலாம் என்றும், நாங்கள் பதிவேற்றம் செய்து விடுவோம் என அந்தப் பெண் கூறியதாக தெரிவித்தார். மேலும், அடுத்ததாக அவர் கூறியது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, கிரைம் நிருபர் என அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், ஆனால் நீங்கள் உங்கள் வீட்டில் நடக்கும் பிறந்த நாள் விழா, அருகில் வசிப்பவர்களின் இல்ல நிகழ்ச்சி என எது வேண்டுமானாலும் செய்தியாக கொடுக்கலாம் என அந்தப் பெண் கூறியதாக அவர் கூறினார். உங்களது அலுவலக முகவரி, தொடர்பு எண் கேட்டபோது, அனைத்தும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்படும். முதலில் பணம் அனுப்புங்கள் என கூறியவரிடம் என தொடர் கேள்வி எழுப்பியதால் அலைபேசியை துண்டித்து விட்டார். 

ஏற்கனவே, பெருகி வரும் போலி பத்திரிகையாளர்களை சமாளிக்க முடியாத சூழ்நிலையில் இவ்வாறு பணம் பறிக்கும் நோக்கில் பத்திரிகையாளர் ஆக வேண்டுமா எங்களை அணுகவும் என பணம் சுருட்ட இவ்வாறு பலவகை உத்திகளை கையாளுகின்றனர். சமுதாய அக்கறையோடு செயல்படும் பத்திரிகைகள் இடையே இவ்வகை ஆட்களை நம்பி ஏமாற்றப்படுவது வேதனை அளிக்கிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...