நீலகிரி : கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு அம்மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி மற்றும் சதீசன் ஆகிய 10 பேர் இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, வழக்கின் விசாரணையை இம்மாதம் ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். குற்றவாளிகள் அனைவரும் ஜூலை 18-ம் தேதி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.