நீலகிரி : ஜூலை மாதத்திற்கான குறைந்தபட்ச பச்சை தேயிலை விலையினை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் ஹரிபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- நீலகிரியில் உற்பத்திசெய்யப்படும் பசுந்தேயிலைக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம், ஏலத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதன்படி, ஜூன் மாத ஏல விற்பனையின் அடிப்படையில், ஜூலை மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு 14 ரூபாய் 38 காசு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இதனை சார்ந்து 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும், 65 ஆயிரத்திற்கும் மேலான விவசாய குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 30 என விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தேயிலை வாரியம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மூலம் நீலகிரியில் உள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகளுக்கும், விவசாயிகள் வழங்கும் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச மாத விலையை
முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா..? என தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை கடைபிடிக்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.