கோவை : குனியமுத்தூர் அருகே இஸ்லாமிய இளைஞர் மீது மதரீதியாக தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : குனியமுத்தூர் அருகே இஸ்லாமிய இளைஞர் மீது மதரீதியாக தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அராஃபத் (24). இவர் பழவியாபாரம் செய்து வருகிறார்.இவர் நேற்று இரவு வழக்கம் போல பணி முடிந்து வெத்தலக்கார வீதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இஸ்லாமிய அடையாளங்களுடன் இருந்த ஜாபர் அராஃபத்தை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், அவர் மீது மத ரீதியான தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞரை அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் மணிகண்டன், வெங்கடேஷ் பிரபு, நிர்மல்குமார் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
