ஆனைகட்டி விபத்து: சமூக ஆர்வலர் மருத்துவர் ரமேஷிக்கு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் எம்.பி ஆறுதல்

கோவை : விபத்தில் மனைவியை இழந்த சமூக ஆர்வலர் மருத்தவர் ரமேசை கோவை நடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார்.


கோவை : விபத்தில் மனைவியை இழந்த சமூக ஆர்வலர் மருத்தவர் ரமேசை கோவை நடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை கணுவாய் அருகே கடந்த ஜூன் 24-ம் தேதி டாஸ்மாக்கில் குடித்து விட்டு வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர்கள் மோதியதில் சமூக ஆர்வலரான மருத்தவர் ரமேஷின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் சாந்தலா படுகாயமடைந்திருந்த நிலையில் மருத்துவர் ரமேஷ் பலரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என மனைவியின் உடல நடுரோட்டில் 5 மணி நேரம் போராட்டம் நடத்தினார். அதனை தொடர்ந்து அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக டாஸ்மாக் கடை எண் .2222 மூடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மருத்துவர் ரமேஷ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் மகள் சாந்தலா உடல் நலம் குறித்து விசாரித்தார். 



இதுகுறித்து எம்.பி., பி.ஆர்.நடராஜன் கூறியதாவது :-

ஆனைக்கட்டி சாலையில் உள்ள ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பல உயிர்களுக்கு ஆபத்து விளைவித்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அந்த கடையை அகற்ற கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதன் நீட்சியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு, சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று அந்த கடையை மூடாததன் விளைவு தற்போது மருத்துவர் ரமேஷின் மனைவி உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே கேரள அரசு இயற்கையை பாதுகாக்கவும், அடிக்கடி விபத்து ஏற்படுவதாலும் அட்டப்பாடி - அகழி - ஆனைக் கட்டி பகுதிகளை மது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் விபத்தும் டாஸ்மாக்கில் குடித்து விட்டு வேகமாக பைக்கில் வந்ததன் விளைவாகவே ஏற்பட்டிருக்கிறது. 

விபத்து ஏற்படுத்தியவர்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் முழுகுடிபோதையில் இருந்ததை கோட்டத்தூர் பழங்குடியினர் மருத்துவமனையின் பதிவேடுகளும் உறுதி செய்கின்றன. இனிமேலாவது வட்டாட்சியர் அளித்துள்ள உறுதிமொழிப்படி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து நிரந்தரமாக டாஸ்மாக் கடை எண் 2222-ஐ மூடப்படும் என்ற உறுதிமொழியை மாவட்ட நிர்வாகம் விரைந்து நிறைவேற்ற வேண்டும். அப்பகுதியில் குடிபோதையில் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கு மக்களை அச்சுறுத்தி வருபவர்களை அடையாளம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார். அவருடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிடோர் இருந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...