கோவையில் கூட்டாஞ்சோறு விளையாடிய குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி : மஞ்சள்தூளுக்கு பதில் சாணி பவுடரை கலந்து உண்டதால் விபரீதம்

கோவை : கோவை தடாகம் அருகே கூட்டாஞ்சோறு விளையாடும்போது, மஞ்சள் தூளுக்கு பதிலாக சாணி பவுடரைக் கலந்து உண்ட குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கோவை : கோவை தடாகம் அருகே கூட்டாஞ்சோறு விளையாடும்போது, மஞ்சள் தூளுக்கு பதிலாக சாணி பவுடரைக் கலந்து உண்ட குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கோவை தடாகம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் 5 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவர் என ஆறு பேரும் நேற்று இரவு கூட்டாஞ்சோறு செய்து விளையாண்டு கொண்டிருந்தனர். அப்போது, சிறுமிகள் சோற்றில் மஞ்சள் தூளுக்கு பதில் தவறுதலாக சாணி பவுடரை கலந்து விட்டனர். பின்னர், இதை அறியாத குழந்தைகள் உண்ணும் பொழுது கசப்படிப்பதை அறிந்து சோற்றை வைத்துவிட்டு தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, பதறிய பெற்றோர்கள் உடனடியாக சாணி பவுடர் கலந்த உணவை உண்ட லோகேஸ்வரி(12), அனுசியா(8), முகுந்தன்(8), ஜீவிதா(14), ஹரிணி (13) மற்றும் யாழினி(5) என ஆறு பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, உடல்நலம் தேறிய குழந்தைகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர், சிறுமிகள் விளையாண்டு கொண்டிருந்த விளையாட்டில் ஆபத்தான சாணி பவுடர் கலந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...