அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் கால்பதிக்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ்

கோவை : திரவ மேலாண்மைகான தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் நிறுவ ரூ.35 கோடி முதலீடு செய்துள்ளது.

கோவை : திரவ மேலாண்மைகான தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் நிறுவ ரூ.35 கோடி முதலீடு செய்துள்ளது.

சி.ஆர்.ஐ. குழுமம் தனது வர்த்தகத்தை உலகளவில் விரிவுபடுத்தி வருகின்றது. இவ்வளர்ச்சி குறித்து சி.ஆர்.ஐ. குழுமத்தின் துணைத் தலைவர் திரு. ஜி. சௌந்தரராஜன் கூறியதாவது, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான தயாரிப்புகளை வடிவமைப்பதில், சி.ஆர்.ஐ. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் நமக்கே முழுமையாக சொந்தமான கிளை நிறுவனத்தை நிறுவ சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளோம். அமெரிக்காவில் செயல்படும் சில பம்புகளை அசெம்பிளிங்கு செய்வதோடு, நிலத்தடி நீர் பம்புகள், கழிவு நீர் பம்புகள், பிரஷர் பூஸ்டர் பம்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பம்புகள் ஆகியவற்றை விநியோகிக்கும். 

விநியோகிஸ்தர்கள் மூலமாக அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நமது தயாரிப்புகளை அனுப்பி வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வியாபாரத்தை இந்நாடுகளிலிருந்து எதிர்பார்க்கிறோம். இந்தப் பிராந்தியத்தில், விற்பனைக்கு பின் வழங்கக் கூடிய சேவைகளையும் நாம் டெலிவரி செய்வதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும், புதிய தயாரிப்புகளை வழங்கவும் உறுதி செய்துள்ளோம். இதனால், அந்தப் பிராந்தியத்தில் நாம் வளர்ச்சியடைய நல்ல வாய்ப்புள்ளது, என்றார்.

இந்தப் பகுதியில் நாம் அறிமுகப்படுத்திய தயாரிப்புகள் பின்வருமாறு:- சுரங்கத் தேவைகளுக்கான பிரத்தியேக பம்புகள், ரசாயன செயல்முறைக்கான பம்புகள், பம்பின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் IoT (Internet of Things) உடன் கூடிய தொழிற்ச்சாலைக்கான பம்புகள் மற்றும் லைட்னிங் அரெஸ்ட்டர் பொருத்தப்பட்ட என்கேப்சுலேடட் சப்மெர்சபிள் மோட்டார்கள் இந்தியாவிலேயே முதன் முறையாக சி.ஆர்.ஐ.யின் ஆராய்ச்சி மையத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...