கோவை : மேட்டுப்பாளையத்தில் கல்குவாரியில் பயன்படுத்தப்படும் அதிக திறன் கொண்ட வெடியால் ஆழ்குழாய் கிணறுகள் சேதமடைந்து விவசாயம் பாதிக்கபடுவதுடன், குடியிருப்புகளிலும் விரிசல் ஏற்படுவதால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காரமடை அருகே படியனூர் கிராமத்தில் உள்ள இந்த கல்குவாரியில் அடிக்கடி பயங்கர சத்தத்துடன் அதிக திறன் கொண்ட மருந்துகளை பயன்படுத்தி வேட்டுகள் வைத்து கற்கள் உடைக்கப்படுகிறது. இதனால், அதில் இருந்து வெடித்து சிதறும் கற்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு பறந்து சென்று குடியிருப்புகள் மீது விழுவதால் வீடுகளின் மேற்கூரைகள் உடைப்பு ஏற்படுவதுடன், பக்கவாட்டு சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலை உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும், விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்த கிரமத்தில், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து கருவேப்பிலை, வாழை போன்றவை பயிர் செய்யபட்டு வரும் நிலையில், இந்த கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, ஆழமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுதால், நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரோட்டம் பாதிக்கப்பட்டு தற்போது தண்ணீரின்றி ஆழ்குழாய்கள் அனைத்தும் வறண்டு விட்டன.

அத்துடன் ஆழ்குழாய் கிணறுகளில் அமைக்கப்பட்ட மோட்டார்கள் இந்த வெடி அதிர்வு காரணமாக கழன்று குழிக்குள்ளேயே விழுந்து விடுவதால் விவசாயிகளுக்கு பல ஆயிரங்கள் நஷ்டம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இரவு பகலாக செயல்படும் இந்த கல்குவாரியில் இருந்து வெளியேறும் புழுதி புகையானது, பல கிலோ மீட்டர் அளவுக்கு பறப்பதால் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களில் படிந்து பயிர்கள் மேலும் வளர்ச்சி அடையாமல் கல்குவாரி புழுதி மண்கள் தடுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இந்த புழுதி மண் குடியிருப்புகளுக்கும் பரவுவதால், அங்கு கால்நடைகளுக்கு வைக்கபட்டுள்ள குடி தண்ணீரிலும் இவை கலப்பதால் அதனை குடிக்கும் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வயிற்றில் கட்டி ஏற்பட்டு உயிரிழப்பதாக தெரிவித்தனர். இது கால்நடைகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி கிராம மக்கள் இதன் காரணமாக, சிலருக்கு புற்றுநோய் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தனி நபர் லாபத்திற்காக ஒரு கிராமத்தையே நாசமாக்கும் இது போன்ற கல்குவாரிகளை தடை செய்யக்கோரி சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள படியனூர் கிராம மக்கள், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.