கோவை : பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் யானைதொல்லை அதிகரித்துள்ள நிலையில் கான்கீரிட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் யானைதொல்லை அதிகரித்துள்ள நிலையில் கான்கீரிட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை வனப்பகுதியில் நவமலை மலைவாழ் கிராமம் உள்ளது. இங்கு காட்டு யானைகள் அடிக்கடி மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதுடன், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றது.கடந்த மே மாதம் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

இதனால், கும்கி யானைகள் ஓரு மாதமாக கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால், காட்டு யானைகள் தொந்தரவு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கும்கி யானைகள் சமீபத்தில் திரும்ப பெறப்பட்ட நிலையில் காட்டுயானைகள மீண்டும் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் எனவும், மலைவாழ் மக்களுக்கு அதே பகுதியில் கான்கிரிட் குடியிருப்புகள் கட்டி தர வலியுறுத்தியும் அப்பகுதி மலைவாழ் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் இந்த மனுவை அளித்தனர்.