கோவை : காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் பயனிகளிடம் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கோவை : காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் பயனிகளிடம் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (42). இவர் கடந்த வெள்ளிக்கிழமை கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் செல்ல தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். ரூ.9 டிக்கெட்டிற்கு அவரிடம் ரூ.15 வாங்கியதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் இவ்வாறு தான் பயணிகளிடம் அதிகம் வசூலிக்கின்றனர். அரசு பேருந்தில் செல்லும் போது ரூ.9 கொடுத்து டிக்கெட் வாங்கினேன். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்வதை கூறிவைத்து திட்டமிட்டே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நான் லக்கேஜ் கொண்டு செல்லாத போதும் லக்கேஜ் என டிக்கெட்டில் போட்டு நூதன முறையில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். மேலும், நான் இரவு 9.45 மணிக்கு பேருந்து ஏறிய நிலையில், எனக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டில் இரவு 10.13 என நேரம் பதிவாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.