கோவை : நீலகிரியில் பெய்து வரும் பருவமழையினால், மேட்டுப்பாளையம் பில்லூர் அனைக்கு நீர் வரத்து 1,500 கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது கேரள காடுகளையும், நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரினை ஆதாரமாக கொண்டுள்ளது. 100 அடி கொள்ளவு கொண்ட அணையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் 75க்கும் கீழ் சென்றது. இதனால், மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு குடி தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் மேற்கு பருவமழை, துவக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்ததால், தண்ணீர் வரத்து எதிர்பார்த்த அளவில் இல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. இதனிடையே, தற்போது கடந்த மூன்று தினங்களாக நீலகிரி மற்றும் சிறுவானி அணை மற்றும் கேரள காடுகளில் மழைபெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர் வரத்தானது அதிகிரிக்க தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் 85 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்தானது 1,500 கன அடியாக உள்ளது. தொடர்ந்து பில்லூர் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்தால் அணை நிரம்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் பில்லூர் அணை இரண்டு முறை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடதக்கது.
இதனிடையே, நீர்வரத்து அதிகரிப்பினால் நேற்று பில்லூர் அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் வழக்கத்தை விட கூடுதலாக திறக்கபட்டது.