கோவை : கோவையில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : கோவையில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை உட்பட தமிழகம் முழுவதும் 114 இலங்கை அகதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற போது, இவர்கள் உயிருக்கு அஞ்சி இங்கு தஞ்சமடைந்தவர்கள் ஆவர். கோவை பூலுவம்பட்டி பகுதியில் கடந்த 29 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அகதிகள் முகாமில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அவர்கள் இன்றளவும் அவர்களுக்கான இந்திய குடியுரிமை பெறாமல் தொடர்ந்து அகதிகளாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் புலம் பெயர்ந்து சென்றவர்களுக்கு அந்த நாட்டின் குடி உரிமை வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் உள்ளது. கோவையில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், வரலாற்றின் அடிப்படையில் தாங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலங்கை சென்றதாகவும், எனவே இந்த மண்ணிற்கு தாங்களும் முழுமையான சொந்தக்காரர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது :-பல ஆண்டுகளாக அகதிகள் என்ற பெயரிலேயே வசித்து வரும் தாங்கள் மனதளவில் மிகவும் வேதனை அடைந்துள்ள நிலையில், அகதிகள் என்ற பெயரை மாற்றி இந்த நாட்டின் குடிமகன்களாக வேண்டும் என விரும்புவதால் தங்களுக்கு இனியும் இலங்கைக்கு செல்ல விருப்பம் இல்லை.என்றனர். இந்தியாவிலேயே வாழ விரும்புவதால் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம், என தெரிவித்தனர்.