கோவை : பட்டா நிலத்தை குடிசை மாற்று வாரிய நிலம் என காலிச் செய்ய சொல்லி நிர்பந்தப்படுத்துவதாகக் கூறி மேல்சட்டை இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே கோவைப்புதூர் பகுதியில் குடியிருப்பு மனைகளுக்கு அருகே ஐசுவரியா லே அவுட் என்ற பெயரில் தனியார் நிறுவனம் சார்பில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு இடம் வாங்கியுள்ள 30-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளிக்க வந்தனர். அப்போது, அவர்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டு முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, ஐஸ்வர்யா லே அவுட்டில் தாங்கள் இடம் வாங்கியுள்ளதாகவும், ஆனால், அந்த இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்ற பெயரில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். முறையான ஆவணங்களுடன் சிறுக, சிறுக சேமித்த பணத்தை கொண்டு வாங்கிய நிலத்தை அரசு நிலம் எனக் கூறுவதால், தங்கள் அதிருப்தியை தெரிவிக்க மனு அளிக்க வந்ததாக அவர்கள் கூறினர்.