கோவையில் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழா : 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை: கோவையில் தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் நடைபெற்ற சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை: கோவையில் தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் நடைபெற்ற சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஆனித்திருமஞ்சனம் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுக மக்கள் இந்த நாற்று நடும் நிகழ்வை விழாவாக கொண்டாடுவது வழக்கம். மேலை சிதம்பரம் என அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் பெருமான் பச்சைநாயகியும் உழவன், உழத்தியாக உருக்கொண்டு இறைவனே நாற்று நட்டு விவசாயம் செய்ததாக ஐதிகம். இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 



கடந்த வாரம் துவங்கிய இவ்விழாவின் 9ம் நாளான இன்று நாற்று நடும் திருவிழா இச்சமுகத்தின் நான்கு வம்ச பட்டக்காரர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக மக்கள் முன்னேற்ற இயக்கத்தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாற்று நட்டு மகிழ்ந்தார்.



முன்னதாக, தேவேந்திர குல சமூக மடத்திலிருந்து ஏர் மற்றும் ஏர்பூட்டிய மாடுகளை அலங்காரம் செய்யப்பட்டு, பட்டிப்பெருமான் முன்னிலையில் நாற்றுக்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 



பின்னர், நான்கு வம்ச பட்டக்காரர்கள் இணைந்து ஏர் உழுது நாற்று நடும் நிகழ்வை துவக்கி வைத்தனர். கூடியிருந்த மக்களுக்கு நாற்றுக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, பின்னர் அப்பகுதியில் கூடியிருந்த சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் நாற்று நட்டு வழிபட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...