கோவை : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் மூலம் வேலை வாய்ப்புகள் பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஆட்டோமொபைல், கட்டுமானம், ஊடகம், ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி அழைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கோவை வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி வ.ஊ.சி மைதானத்தில் நிறைவு பெற்றது. பலூன்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்ட வேலை வாய்ப்பு ஆணையர் லதா, இனை ஆணையர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.