கோவையில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘உயிர் நீர்’ நிகழ்ச்சி

கோவை : கோவையில் உயிர் நீரை சேமிப்போம் எனும் தலைப்பில் குறும்படங்கள் மற்றும் ஓவிய போட்டிகள் மூலம் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை : கோவையில் உயிர் நீரை சேமிப்போம் எனும் தலைப்பில் குறும்படங்கள் மற்றும் ஓவிய போட்டிகள் மூலம் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவையில் 'சிறுதுளி' அமைப்பு, புரூக் பீல்ட்ஸ் இணைந்து 'உயிர் நீர்' எனும் தலைப்பில் தண்ணீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கண்காட்சி, குறும்படம் மற்றும் ஓவியப்போட்டி 'புரூக் பீல்ட்ஸ்' வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. 



இதில், உயிர் நீரை சேமிப்போம் என்பதை மையப்படுத்தி, மழைநீரை சேகரிக்கும் முறை, மழைநீர், ரசாயணமற்ற சுத்திகரிப்பான் குறித்த கண்காட்சி மற்றும் மழைநீர் சேகரிப்பு நடைமுறைகளுக்கான தீர்வுகள் குறித்து வணிக வளாகத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.



தொடர்ந்து, நடைபெற்ற நீர் மேலாண்மை குறித்த குறும்பட போட்டி மற்றும் ஓவிய போட்டிகளில் சிறந்தவைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் மற்றும் புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தின் மேலாளர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...