உடல் போல் மன நலமும் பேண வேண்டும் : மன நல நிபுணர் மருத்துவர் இ. சண்முகம்

கோவை : ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் மற்றும் ஆரோக்கியா மருத்துவமனையும் இணைந்து வழங்கும் நலந்தானா - நலம் நம் கையில் ஆரோக்கியத் தொடர் உரை நிகழ்ச்சியின் ஆறாம் நாள் நிகழ்வில் ‘உள்ளம் பேண் உடல் நலம் வரும்’ என மன நலன் முக்கியத்துவம் குறித்து எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியின் மன நல நிபுணர் மருத்துவர் இ. சண்முகம் பேசினார்.

கோவை : ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் மற்றும் ஆரோக்கியா மருத்துவமனையும் இணைந்து வழங்கும் நலந்தானா - நலம் நம் கையில் ஆரோக்கியத் தொடர் உரை நிகழ்ச்சியின் ஆறாம் நாள் நிகழ்வில் ‘உள்ளம் பேண் உடல் நலம் வரும்’ என மன நலன் முக்கியத்துவம் குறித்து எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியின் மன நல நிபுணர் மருத்துவர் இ. சண்முகம் பேசினார். 



அவர் பேசியதாவது :- ‘மனநலன் சார்ந்த பிரச்சனைகளை தனக்கு உள்ள பலவீனமாக நினைத்து மறைத்து வாழ்கிறார்கள். அது ஒரு ஆரோக்கியக் குறைபாடு தான். கட்டாயம் ஆலோசனைகள் வழியாகவும், மாத்திரைகள் வழியாகவும் சரி செய்ய வேண்டும். மனநல சீர்கேட்டினால் தனி நபருக்கு மட்டும் பிரச்சனை இல்லை, அவரது குடும்பத்திற்கு, சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றது. திருவள்ளுவர், மன நலம் மண்ணுயிர்க் காக்கும் என்கிறார். சமீப காலங்களில் நம் சமூகத்தில் தற்கொலை, கொலை, பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறி மன நலச் சீர்கேடு சமூகத்தில் அதிகரித்துள்ளதற்கான அறிகுறி. 

உலகளவில் ஒரு வருடத்துக்கு 30 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்கொலை அதிகரித்து வருகிறதாகவும் தெரிவிக்கிறது. தற்கொலை போன்றவற்றுக்கு காரணம் மன நலம் ஆரோக்கியமாக இல்லாதது தான்.



சமீப காலங்களில் மனச்சோர்வு என்ற வார்த்தை சிறியவர் முதல் பெரியவர் வரை எளிதாக புழங்குகின்றது. மனச்சோர்வுக்கு காரணம் சிறு வயதில் இருந்தே பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கற்றுக் கொடுக்காமல் பெற்றோர்கள் இருப்பதே. பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி வாழவே பெற்றோர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, இந்தத் தலைமுறைப் பிள்ளைகளால் எந்தப் பிரச்சனையும் எதிர் கொள்ள முடியாமல் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள்.

பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பழக்குதல், மனம் விட்டு பேசுவது, நேர்மறையான வார்த்தைகளைக் கூறுவது, ஊக்கப்படுத்துவது, உள்ளிட்டவற்றால் இளம் தலைமுறையினரை மனச்சோர்வில் இருந்து மீட்க முடியும். தினசரி உடற்பயிற்சி செய்யப் பழக்கப்படுத்த வேண்டும். மனநலப் பிரச்சனைகள் சரி செய்யக் கூடிய பிரச்சனை தான். பிரச்சனைகள் இருந்தால் தயக்கப்படாமல் மன நல மருத்துவரை அணுகி ஆலோசனைகள், மாத்திரைகள் வழியாக சரி செய்து கொள்ளலாம், என்றார். 

அடுத்து, உணவே மருந்து என்ற தலைப்பில் ஒலிம்பிக் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷைனி பேசினார். 



அவர் பேசியதாவது :- ஒரே எடையுள்ளவர்கள் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடு உடலுக்கு உடல் மாறுபடும். ஆகவே உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடு மட்டுமே உடல் இளைக்க போதுமானதல்ல. தசைகள் எவ்வாறு உள்ளன என்பதை சோதித்து அறிந்து கொள்வது நல்லது. சம்மணங்கால் போட்டோ அல்லது குத்தவைத்து உட்காரவோ முடியாது என்றால் ஃபிட்னெஸ் குறைபாடுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முழு உடல் பரிசோதனைகளின் போது இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடுகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கழுத்தைச் சுற்றி மருக்கள் தோன்றுவது வெறும் தோல் பிரச்சனை அல்ல. இன்சுலின் குறைபாட்டின் ஆரம்பமாகவும் இருக்கலாம். புற்றுநோய் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. உண்ணும் உணவும் சூழலும் மாசுபடுவதே காரணம். உணவில் கோதுமை, மாமிசம் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது பலனளிக்கும். 



சாப்பிட்ட 2 மணி நேரத்தில் பசியெடுப்பதும் ஏதாவது இனிப்பை சாப்பிட தோன்றுவதும் இன்சுலின் குறைபாடின் அறிகுறிகள். நடைப்பயிற்சி, யோகா, உடல்பயிற்சி, சைக்கிளிங், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் அவசியம். சூரிய நமஸ்காரம், நீச்சல் ஆகியன ஆரோக்கிய வாழ்விற்கானவை. இரவில் தாமதமாக தூங்குதல் கூடாது. சாப்பிடும் போது டிவி, செல்போன் போன்ற கவனச்சிதறல் கூடாது. அன்றாட செயல்பாடுகளில் உற்சாகமாக ஈடுபட வேண்டும். சோம்பல், பகல் உறக்கம் ஆகாது என்று பேசினார். ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...