நகரத்தில் இருந்து எளிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக : கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

கோவை : ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களை நகரத்தைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களை நகரத்தைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகர பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிசை மாற்று வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் குடியிருந்து வருகிறார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக இம்மக்கள் குடிசை மாற்று வாரியத்தால் கடன் உதவி உள்பட பல வசதிகள் செய்யப்பட்டு குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், இம்மக்களை தொடர்ந்து வெளியேற்ற மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது உக்கடம், ஜீவாநகர், தடாகம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்கிறது. கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு இதுவரை யாருக்கும் நகரத்தில் பட்டா வழங்கப்படவில்லை. மாநகராட்சியோடு புதிதாக இனைக்கப்பட்ட பகுதிகளிலும் மாநகராட்சி என்கிற காரணத்தை சொல்லி பட்டா மறுப்பது என்பது நடந்து வருகிறது.

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்கள் பல இடங்களில் குடியிருந்து வருகின்றனர். நகரத்தை கட்டியமைத்தும், இன்று வரை தூய்மைப்பணி மேற்கொண்டு வரும் இம்மக்களுக்கு பட்டா வழங்காதது மட்டுமல்லாமல், அவர்களை காலி செய்கின்ற நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையும் நகரத்தை சார்ந்தே இருக்கிறது. கோவை நகரத்திற்குள்ளேயே அரசின் பிறதுறைகளின் காலி இடங்கள் ஏராளமாக உள்ளது. அங்கு இவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்கு சிந்திக்காமல் தாழ்த்தப்பட்ட மக்கள் தெற்கு திசையில் இருக்க வேண்டும் என்பது எதன் அடிப்படையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்கிற முயற்சியாக வசிப்பிடத்திற்கு அருகில் இருப்பதை மறுத்து போக்குவரத்து வசதியற்ற, கல்வி கூடங்கள் இல்லாத இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இம்மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தீவிரமாக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். 

அந்த மக்களை பொறுத்தவரை அவர்கள் வாழ்கின்றன இடத்திலிலேயே பட்டா வழங்குவதையும், மத்திய மாநில அரசுகளின் நிதிஉதவிகளோடு அங்கேயே வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும். இதுதான் கோவையை நம்பி இருக்கிற உழைப்பாளி மக்களை பாதுகாக்கிற நடவடிவகையாக இருக்கும். ஆகவே, 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கிற மக்களுக்கு பட்டா கொடுக்கிற ஏற்பாட்டை அரசு செய்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மாறாக வேறு காரணம் சொல்லி இம்மக்களை வெளியேற்றும் அரசு நிர்வாகத்தின் நடவடிக்கையை ஒருகாலும் ஏற்கமுடியாது. இதுகுறித்து அனைத்து பகுதிமக்களிடமும் கலந்தாய்வு, களப்பணி மேற்கொள்வது என தீர்மானித்திருக்கிறோம். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஏழை,எளிய தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களை திரட்டி அரசின் கவனத்தை ஈர்க்கிற வகையில் போரட்ட நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம், என பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவை சித்தாபுதூர், ஜீவா நகர், தடாகம் சாலை உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் ஞாயிறன்று காந்திபுரத்தில் உள்ள சி.பி.எம். அலுவலகத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து மாவட்ட, மாநகர நிர்வாகத்தால் தாங்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை குறித்து கோரிக்கை மனு அளித்தனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...