தென்மேற்கு மழையினால் பொலிவிழந்து காணப்படும் உதகை ரோஜா பூங்கா

நீலகிரி : உதகையில் தென்மேற்கு பருவமழை காரணமாக சர்வதேச புகழ் வாய்ந்த ரோஜா பூங்காவில் அழகுடன் காணப்படும் ரோஜா மலர்கள் அழுகி வருவதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது.

நீலகிரி : உதகையில் தென்மேற்கு பருவமழை காரணமாக சர்வதேச புகழ் வாய்ந்த ரோஜா பூங்காவில் அழகுடன் காணப்படும் ரோஜா மலர்கள் அழுகி வருவதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. 

தென்மேற்கு பருவ மழை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.



இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதில், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா மட்டுமல்லாமல் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு செல்கின்றனர். இதில், ரோஜா பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 



இந்த, நிலையில், சாரல் மழை காரணமாக ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா பூக்கள் அழுகி வருவதால், ரோஜா பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்து, தொட்டபெட்டா, படகு இல்லம், ஆறாவது மெயில், அவலாஞ்சி உள்ளிட்டப் பகுதிகளை காண செல்கின்றனர். செப்டம்பர் மாதம் உதகையில் இரண்டாவது சீசன் துவங்கும் போது ரோஜா மலர்கள் வழக்கமான புதுப் பொலிலிவடையும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...