நீலகிரி : கூடலூர் அருகே இன்று காலை பால் ஏற்றி சென்ற வண்டியை காட்டு யானை தாக்கியதில் வண்டி நிலை தடுமாறி தலைகீழாக விழுந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
நீலகிரி : கூடலூர் அருகே இன்று காலை பால் ஏற்றி சென்ற வண்டியை காட்டு யானை தாக்கியதில் வண்டி நிலை தடுமாறி தலைகீழாக விழுந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில், இன்று காலை தொரப்பள்ளி பகுதிக்கு வயல் வழியே பால் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஜீப்பினை அவ்வழியாக வந்த காட்டு யானை ஆக்ரோஷத்துடன் தாக்கியது. இதில், ஜீப் கவிழ்ந்து சாலையில் குப்புற விழுந்தது. இதன் காரணமாக சாலையில் பால் கீழே கொட்டியது இதைத்தொடர்ந்து, வண்டி ஓட்டுநர் ராஜா எழுப்பிய கூச்சலை அடுத்து, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து ராஜாவை மீட்டனர்.

இதனிடையே, தொரப்பள்ளிப் பகுதியில் தொடர்ந்த அச்சுறுத்தி வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.