நீட் தேர்வு விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசின் சட்ட மசோதாக்களை நிராகரித்தது மத்திய அரசு

டெல்லி : மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய 2 சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி : மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய 2 சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் சேர தேசிய அளவில் நடைபெறும் நீட் தகுதித் தேர்வில் வெற்றிப் பெறவேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆகியவைகளுக்கு உத்தரவிடவேண்டும்.

இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டிருந்தால், அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது. அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கும். நாடாளுமன்ற குழு பரிந்துரையின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே சொந்த நடைமுறையை பின்பற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு இரு சட்டமசோதாக்களை இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அவற்றை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், இந்த சட்டமசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா..? நிராகரிக்கப்பட்டுள்ளதா..? என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை சார்பு செயலாளரிடம் கேட்ட போது, இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறியதாக, மத்திய அரசுத் தரப்பில் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் எப்போது பெறப்பட்டது..? அந்த மசோதாக்கள் எப்போது நிராகரிக்கப்பட்டது..? என்பது உள்ளிட்ட விவரங்களை வரும் 16-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உ த்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...