சூலூர் அருகே 5 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

கோவை : சூலூர் அருகே தனியார் தோட்டத்தின் உணவுகளை உட்கொண்ட 5 மயில்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


கோவை : சூலூர் அருகே தனியார் தோட்டத்தின் உணவுகளை உட்கொண்ட 5 மயில்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.



கருமத்தம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள விவசாய நிலத்தில் 5 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக அங்குள்ள பொதுமக்கள், போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 



அதன் பேரில், விரைந்து வந்த சையத் அலி இயற்கை வரலாறு மற்றும் பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மயில்களின் சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். 



அதில், மர்ம நபர்கள் திட்டமிட்டே மயில்களுக்கு விஷம் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில் கோழியின் இறந்த உடல்களும் காணப்பட்டது.



“அண்மை காலமாக விவசாயிகளால் மயில்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இது எந்தவொரு உள்நோக்கத்திற்காகவும் செய்வதில்லை. அவர்களின் பயிர்களை பாதுகாக்க வேண்டும் என இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்,” என்கிறார் உள்ளூர்வாசி.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...