மேட்டுப்பாளையத்தில் புள்ளிமானை வேட்டையாடிய 6 பேர் கைது : 60,000 அபராதம் விதிப்பு

கோவை : மேட்டுப்பாளையத்தில் புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 6 பேர் கைதுகுற்றவாளிகளுக்கு வனத்துறை 60,000 அபாராதம் விதித்தது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 6 பேர் கைதுகுற்றவாளிகளுக்கு வனத்துறை 60,000 அபாராதம் விதித்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கன்டியூர் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் இங்கு மான்கள் அதிக அளவில் உள்ளது. தற்போது வனத்தில் அவற்றிக்கான உணவுகள் போதிய அளவு கிடைக்காமல் போவதால், மான்கள் கூட்டம் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து வருகின்றன. அங்குள்ள பயிர்களை மேயும் மான் கூட்டங்களை சிலர் வேட்டையாடுவதாக மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கண்டியூர் காப்புக் காட்டில் இருந்து மாலை ஒரு புள்ளிமான் வெளியேறிய நிலையில் அதனை ஒருகும்பல் வேட்டையாடியுள்ளது. அப்போது, அந்த பகுதியில் ரோந்து வந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், சுண்டப்பட்டி பிரிவு வனவர் முத்துகிருஷ்ணமூர்த்தி மற்றும் வனத்துறை ஊழியர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, இருவர் மட்டுமே சிக்கிய நிலையில் மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து, சிக்கியவர்களிடம் விசாணை நடத்தியதில் கெம்மாரம்பாளையம் கிராமம், மாந்தரைக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கொட்டையப்பன் (எ) இராமசாமி (55) தனது அக்காள் மகன் ரகு மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மான்கறி சமைத்து மதுவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. 

பின்னர் அவர்களிடம் நடத்திய மேல் விசாரணையின் அடிப்படையில் தப்பியோடிய சிவராஜ், ரமேஷ், ரகு மற்றும் அய்யாசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவை மாவட்ட வன அலுவலர்வெங்கடேஷின் உத்தரவின்படி, குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...