கோவை: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி இன்று கோவையில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக டி ஐ ஜி கார்த்திகேயன், சேலம் சரக டி ஐ ஜி பிரதீப் குமார், கோவை, திருப்பூர், சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மேற்கு மண்டலத்தில் குற்ற சம்பவங்களை எவ்வாறு தடுப்பது மற்றும் ஏற்கனவே உள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இடங்களில் எந்தமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.