கோவை : காவல்துறையைக் கொண்டு விவசாயிகளை ஒடுக்குவதை கண்டித்து கோவை எம்பி ம்., பி.ஆர். நடராஜன் கண்டனம் அறிக்கை வெளியிட்டார்.

விளை நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் மின்கோபுரத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை ஏவி விடும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு நில அளவீடும் பணிகளை துவக்கியுள்ளது. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அச்சமடைந்துள்ள விவசாயிகள் தங்களின் நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எவ்வித முன்அறிவிப்புமின்றி காவல்துறையினர் உதவியுடன் விவசாயிகளின் நிலத்தில் அத்துமீறி காவல்துறையினர் உதவியுடன் பவர்கிரிட் அதிகாரிகள் நுழைவதை வன்மையாக கண்டிக்கிறேன்.