நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோயில் மற்றும் மார்க்கெட் பகுதியில் ஆட்சியரின் உத்தரவின் பேரில், மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் அடைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள விபி தெரு பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகே குடியிருப்புகள், கோயில்கள் மற்றும் கடைவீதி இருப்பதால் இதனை மூடவேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து கடந்த மாதம் 19-ம் தேதி மாவட்ட ஆட்சியர் இந்த கடையை மூடுவதற்கு உத்தரவிட்டார். பொது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த இந்த டாஸ்மாக் கடையை மூடியதால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று திடீரென இப்பகுதிக்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறந்தனர். இதனை அறிந்து வந்த இப்பகுதி மக்கள் டாஸ்மாக் ஊழியர்களிடமும், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது.