நீலகிரி : நீலகிரி மாவட்டம் தேனலை அருகே குடியிருப்பு பகுதியில் இருந்த குப்பைகளை உண்பதற்காக வந்த கரடியை அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேனலை கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதிக்குள் காணப்படுகிறது. இப்பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், உணவு தேடி தேனலை கிராமத்துக்கு வந்த கரடி அங்கு சேகரித்து வைத்திருந்த குப்பையை கிளறி, அதில் இருந்து உணவுகளை எடுத்து உண்டு கொண்டிருந்தது. இனை கண்ட பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அந்தக் கரடியை விரட்டி அடித்தனர். அண்மைக் காலமாக நீலகிரியில் உள்ள கிராமங்களில் காட்டெருமை மற்றும் கரடி அவ்வப்போது புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும் தாக்கியும் வருவதால், இவற்றை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.