கோவை : கோவை மாவட்ட எம்.பி., பி. ஆர். நடராஜனை சந்தித்து பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.

காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் இன்று பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதில், உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு வரும் அதிகாரிகள் காவல்துறையினரை பயன்படுத்தி ஒடுக்கப்படுவதாகவும், பெண்கள் என்றும் பாராமல் கைது செய்ய முயல்கின்றனர். உணவு உற்பத்தியை தவிர வேறு எந்த பாவமும் செய்யாத விவசாயிகளை அச்சுறுத்தும் நடவடிக்கை குறித்தும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பி.ஆர்.நடராஜன் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர். பழனிச்சாமி, தலைவர் வி.பி. இளங்கோவன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் தமிழ் ராஜேந்திரன், பொன்னுசாமி, சண்முகசுந்தரம் மற்றும் கொங்குபேரவையின் நிர்வாகி பெரியசாமி, சிவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்தனர்.