பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைகளை தூர்வாரக் கோரி மத்திய அரசுக்கு எம்.பி. மனு

கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைகளை தூர்வாரக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மனு அளித்தார்.

கோவை : பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைகளை தூர்வாரக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மனு அளித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதவாது :- பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழியாறு அணை, பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு அணை, பெருவாரிப்பள்ளம் அணை, சோலையாறு அணை, அப்பர் நீராறு அணை, லோயர் நீராறு அணை, அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அப்புறப்படுத்தி அணைகளை முழுமையாக தூர்வாரி மழை காலங்களில் கிடைக்கப்பெறுகின்ற அதிக அளவு நீரை சேகரிப்பதற்கு மத்திய அரசினுடைய நீர்வளத் துறை அமைச்சகம் தூர் வாருவதற்கான நிதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அணைகள் மூலமாக ஐந்து டிஎம்சி அளவுக்கு கூடுதல் நீர் சேகரிப்பு செய்வதற்கான வாய்ப்புகளை விரிவாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த அணைகளை ஆய்வு செய்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்து உள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...