மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்ட் குறித்து தகவல் அளித்தால் 2 லட்சம் சன்மானம் அறிவிப்பு

கோவை : மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தகவல் தருவோருக்கு இரண்டு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என. தேசிய புலனாய்வு முகாமை அறிவித்துள்ளது.


கோவை : மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தகவல் தருவோருக்கு இரண்டு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என. தேசிய புலனாய்வு முகாமை அறிவித்துள்ளது.

மேற்குதொடர்ச்சி மலை காடுகளில் மறைந்து இருக்கும் மாவோயிஸ்ட்டுகள் அரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு கருத்துகளை தெரிவிப்பதுடன், ஆயுத பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில வனப்பகுதியில் இவர்களது நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், இவர்களை கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தபட்ட மாநிலங்கள் சிறப்பு படைகளை ஏற்படுத்தி கண்காணித்து வரும் நிலையில், இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். 

அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மாவோயிஸ்ட்கள் மலைகிராமங்களில் நுழைந்து அவர்களை மூலை சலவை செய்து அங்குள்ள இளைஞர்களை தங்களது பக்கம் ஈர்த்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனையடுத்து, கேரள மற்றும் கர்நாடக வனப்பகுதியை ஒட்டி தமிழக வனப்பகுதிகள் அமைந்துள்ளதால், அந்த வனப்பகுதிகள் இருந்து தமிழகம் பகுதியில் நுழையா வன்னம் தமிழக போலீசாரும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் என்ற சிறப்பு அதிரடி படையை ஏற்படுத்தி தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தை பொறுத்தவரை கேரள மாநில எல்லையாக உள்ள முள்ளி, பட்டிச்சாலை, ஆனைக்கட்டி போன்ற பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், தடைசெய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வ்கிகளாக சந்தேகிக்கப்படும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுந்தரிமற்றும் ஜெயன்னா ஆகியோர் பல்வேறு சதி திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அவர்களது புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள் போஸ்டர்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் மலைகிராமங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இவர்களை பற்றி தகவல் கொடுத்தால் 2 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என என்.ஜ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. அனைத்துகிராமங்களிலும் இந்த தகவல் பரப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அதிரடி படை போலீசாரும் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...