40 மி.கிராம் எடையில் உலககோப்பை மாதிரியை வடிவமைத்த தங்க நகை பட்டறை தொழிலாளி

கோவை : 40 மி.கிராம் எடையில் உலக கோப்பை மாதிரியை கோவையைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.

கோவை : 40 மி.கிராம் எடையில் உலக கோப்பை மாதிரியை கோவையைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.



கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு காந்தி பார்க் அருகில் உள்ள சுந்தரம் வீதியில் தங்க பட்டறை உள்ளது. தங்க நகை பட்டறை தொழிலாளியான வெங்கடேசன், கடந்த 2009ம் ஆண்டு முதல் சிறிய அளவிலான பல்வேறு வடிவங்களை செய்து வருகிறார். 170 மி.கிராமில் துப்பாக்கி, 300 மி.கிராமில் தேர் மற்றும் தாமரை,110 மி.கிராமில் கிட்டார், 40 மி.கிராமில் காந்தி கண்ணாடி என பலவற்றை வடிவமைத்து உள்ளார். இந்த நிலையில், உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 40 மி.கிராம் அளவில் உலக கோப்பையை செய்துள்ளார்.



இது குறித்து வெங்கடேசன் கூறுகையில், “கடந்த 23 ஆண்டுகளாக தங்க நகை பட்டறை தொழில் செய்து வருகிறேன். 2009ம் ஆண்டில் இருந்து பல்வேறு வடிவமைப்புகள் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்ற போது 150 மி.கிராமில் உலக கோப்பையை செய்தனர். இந்த முறை 40 மி.கிராமில் செய்துள்ளேன். மேலும், கின்னஸில் இடம் பெறவே இது மாதிரி வடிவங்கள் செய்து வருகிறேன். தற்போது வடிவமைக்கப்பட்ட உலக கோப்பை மாதிரியை செய்ய 4 மணி நேரம் ஆனது, எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...