தவறான பிரசவ அறுவை சிகிச்சையால் 21 நாட்களாகியும் டிஸ்சார்ஜ் செய்யப்படாத பெண் : திருப்பூர் அரசு மருத்துவமனை முற்றுகை

திருப்பூர் : திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டதால், 21 நாட்கள் ஆகியும் பெண்ணினை வீட்டிற்கு அனுப்பாததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டதால், 21 நாட்கள் ஆகியும் பெண்ணினை வீட்டிற்கு அனுப்பாததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



திருப்பூர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி - லட்சுமி தம்பதியரின் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், 14ம் தேதி லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில், அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டு சிறுநீர் குழாயை அறுத்து விட்டதாகவும், அதற்கு யூரினல் ட்யூப் இணைக்கப்பட்டது.



பின்னர், 21 நாட்கள் கடந்தும் யூரினல் ட்யூபை அகற்றாமல் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டு 9 நாட்களில் வீட்டுக்கு அனுப்பும் சூழலில், மருத்துவர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டு அதனை மறைப்பதாகவும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டதற்கு, “சிசேரியன் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது, சிலருக்கு சிறுநீரக பை சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். மேலும், உள் ரணங்களால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், யூரின் ட்யூப் வைக்கப்படும். உள்ரணம் ஆறிய பின் ஒரு மாதத்தில் யூரினல் ட்யூப் அகற்றப்படும். இது வழக்கமான நடைமுறைதான்,”என தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...