நீலகிரி : குன்னூர் அருகே சோகதொரை பகுதியில் தனியார் கிணற்றில் விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சோகதொரைப் பகுதியில் உள்ள வனத்தல் பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த இரண்டு காட்டெருமைகள் இந்த கிணற்றில் தவறி விழுந்தன. அதில், ஒரு காட்டெருமை உயிரிழந்த நிலையில் மற்றொரு காட்டெருமை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரோடு இருக்கும் காட்டெருமையை காப்பாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பின் காட்டெருமை வனத்துறையினர் கிணற்றுக்கு அருகில் வெட்டியிருந்த வழியே தப்பி வனத்திற்குள் சென்றது.