கோவை : என்.டி.சி. தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அடிப்படை ஊதியத்தில் இருந்து ரூ. 400 உயர்த்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகம் (என்.டி.சி.) செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஐந்து என்.டி.சி. பஞ்சாலைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்திர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மூலம் புதுப்பிக்கப்படும். பழைய ஒப்பந்தகால கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதியில் முடிவடைந்ததையடுத்து. புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அங்கிகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எப் மற்றும் ஏ.டி.பி. தொழிற்சங்க பிரதிநிதிகள் என்.டி.சி. நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறையின் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே, 2019 இந்த இடைப்பட்ட காலத்தில் என்.டி.சி. நிர்வாகத்தோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இதனை நிர்வாகம் தேர்தல் நடைமுறையை காரணம் காட்டி நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில், நேற்று மதுரை மத்திய தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எல்.பி.எப் சார்பில் பார்த்தசாரதி, சி.ஐ.டி.யு. சார்பில் சி. பத்மநாபன், சேவியர்,சிற்றரசு, பங்கஜமில் ராஜேந்திரன்,என்.டி.சி. ஷோரும் ராஜேந்திரன், ஐஎன்டியுசி சார்பில் சீனிவாசன், என்டிஎல்எப் சார்பில் ரங்கசாமி, ஏடிபி சார்பில் கோபால் ஆகியோர் பங்கேற்றனர். நிர்வாகத்தின் சார்பில் பொருப்பு அலுவலர் எஸ்.வெங்கடேஷ், பொதுமேலாளர் (நிதி) சுதாகரன், உதவிபொதுமேலாளர் (மனிதவள மேம்பாடு) ராஜேந்திரகுமார் ஆகியோரும், மத்திய தொழிலாளர் துறையின் சார்பில் மண்டல மத்திய தொழிலாளர்துறை ஆனையாளர் பி.சிவராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்த உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தானது.
இதில், அடிப்படை ஊதியத்தில் இருந்து ரூ.400 உயர்த்தி கொடுக்கப்படும். மாறுபடும் பஞ்சப்படி புள்ளிக்கு 46 பைசாவிலிருந்து 50 பைசாவாக 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படி ரூ.400ல் இருந்து 610 ரூபாயகாவும், விடுப்பு பயண சலுகை(எல்டிசி) ஒரு வேளை நாளுக்கு 1 ரூபாயிலிருந்து ரூ. 5 உயர்வு அளிக்கப்பட்டு, 6 ரூபாயாக எல்.டி.சி. உயர்த்தப்பட்டுள்ளது. தற்செயல் விடுப்பு (சிஎல்) ஆறு நாட்களில் இருந்து ஏழு நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். நிலுவைத்தொகையை 30 நாட்களுக்குள் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் ரூ.1,700 அனைவருக்குமான ஊதிய உயர்வாய் இருக்கும். இந்த ஒப்பந்தம் ஐந்து வருடம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது.