கரீபியன் நாட்டு மக்களுக்கு பேட் மேன் ஆகிறார் பேட்ஸ்மென் பிராவோ

கோவை : மேற்கு இந்தியா கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ, பெண்களின் மாதவிடாய் காலங்களில் உதவ குறைந்த விலை நாப்கின்களை தயாரிக்க டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பெண்களை கொண்ட குழு ஒன்றை விரைவில் அமைக்கவுள்ளார்.

கோவை : மேற்கு இந்தியா கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ, பெண்களின் மாதவிடாய் காலங்களில் உதவ குறைந்த விலை நாப்கின்களை தயாரிக்க டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பெண்களை கொண்ட குழு ஒன்றை விரைவில் அமைக்கவுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டரான பிராவோ கோவையில் உள்ள சந்தையில் மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தியதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்ற அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்தார். அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளின் போது முருகானந்தத்தின் பணிகள் பற்றி அறிந்து கொண்ட அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். கோவையில் 'பேட்மேன்' முருகானந்தத்தின் முகவரியை பிராவோவின் மேலாளர்கள் உறுதிப்படுத்திய பின்னர், 35 வயதான கிரிக்கெட் வீரர் அவரை சந்திப்பதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து நேற்று தினம் கோவையில் உள்ள கே.என்.ஜி. புதூருக்கு வந்தடைந்தார். 

கலந்துரையாடலின் போது, பிராவோ தனது நாட்டில் பல பள்ளி பெண்கள் மாதவிடாய் காலங்களில் வகுப்புகளைக் காணப்படுவதில்லை என்றும், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மேற்கு இந்திய தீவுகளில் மிகவும் தேவை என்றும் குறிப்பிட்டு கூறினார். முருகானந்தம் குறைந்த விலையில் சுகாதார நாப்கின்கள் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை டிரினிடாடிற்கு அனுப்புவதாக உறுதியளித்தார். கோவையில் இருந்து கப்பல் மூலம் ஏற்றுமதி செலவை பிராவோ ஏற்று கொள்வதாகவும், ஆனால் இயந்திரம் இலவசமாக அவருக்கு அளிப்பதாக உறுதி தெரிவித்தார். தனது இயந்திரம் பிராவோவுக்கு கிடைக்க ஒன்றரை மாதங்கள் ஆகலாம், அதே நேரத்தில் 10 நாட்களுக்குள் சாதனம் தயார் நிலையில் இருக்கும் என முருகானந்தம் தெரிவித்தார். 

கிரிக்கெட் வீரர் பிராவோ சாதனத்தின் செயல்பாட்டைக் கண்டு, தனது நாட்டிற்கு கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், அறிவுறுத்தல்களை கவனமாகக் கற்றுக்கொண்டபின் பிராவோ, இரண்டு நாப்கின்களையும் செய்தார் எனவும் முருகானந்தம் தெரிவித்தார். பிராவோ உடனான சந்திப்பு ஆச்சரியமாக இருந்ததாகவும், ஏனெனில் அவருக்கு தெரிந்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் என பேட்டியில் கூறினார் முருகானந்தம். 

மேலும், இந்த காரணத்திற்காக தனது நாட்டில் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் பிராண்ட் தூதராக பிராவோ செயல்படுவார் என கூறினார். முருகானந்தம் கண்டுபிடித்த இயந்திரம் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இயங்கத் தொடங்கினால், அவரது சாதனத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துவிடும். பிராவோ அவரது பிஸியான கிரிக்கெட் கால கட்டத்திலும், பிராவோவின் வருகை மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு என்பது காலத்தின் தேவையாக இருப்பது நிரூபணம் ஆகிறது என்று முருகானந்தம் கூறினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...