கோவை : துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வழிமறித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பிடுங்கி வந்த திருநங்கைகள் கூட்டத்தினர், தற்போது பொதுமக்கள் பலர் கூடியிருக்கும் பகுதியிலேயே தைரியமாக பணத்தை பிடுங்கி அரைநிர்வாணமாய் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வழிமறித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பிடுங்கி வந்த திருநங்கைகள் கூட்டத்தினர், தற்போது பொதுமக்கள் பலர் கூடியிருக்கும் பகுதியிலேயே தைரியமாக பணத்தை பிடுங்கி அரைநிர்வாணமாய் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகத்தால் பின்தள்ளப்பட்டு உள்ள திருநங்கைகள் இன்றைய காலகட்டத்தில் பல துறைகளில் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். இவர்களின் சாதனைகளுக்கு அரசுத் தரப்பிலும் ஊக்குவிக்கப்பட்டு விடுகிறது. ஆனால், சமூக விரோத செயலில் ஈடுபடும் சில திருநங்கைகள் கூட்டத்தினர் செய்யும் சட்டவிரோத செயல்கள் பொதுமக்கள் மத்தியில் திருநங்கைகளின் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மேலும், வாகன ஓட்டிகளை குறிவைத்து பணம் பறிப்பது, குடும்பமாக செல்பவர்களிடம் அடித்து பணம் பிடுங்குவது, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கிடைத்த பொருட்களை பிடுங்கி செல்வது என்பதெல்லாம் இருந்தது போக, தற்போது கூட்டமாக இருக்கும் பொது இடங்களில் கூட பயமின்றி பணத்தை பிடுங்கி செல்லும் சம்பவம் தற்போது அதிகரித்து விடுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை கவுண்டபாளையம் பகுதியில் உள்ள எப்எக்ஸ் என்னும் சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இத்திறப்பு விழாவிற்கு வந்த இரண்டு திருங்கைகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் பேசுவது போல் நடித்து சட்டை பையில் வைத்திருந்த 16 ஆயிரம் ரூபாய் பணத்தை பிடுங்கினர். இதனால், செய்வதறியாமல் அதிர்ந்து போன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணத்தை திருப்பி தரும்படி திருநங்கைகளிடம் கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி திருநங்கைகளிடம் பணத்தைத் தரும்படி வலியுறுத்தினர். இதனால், எழுந்த வாக்குவாதத்தில் பணத்தைப் பறித்த திருநங்கைகளை போலீசிடம் ஒப்படைக்கும்படி பொது மக்கள் பேசிக் கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த திருநங்கை வழக்கம்போல ஆடைகளை கழட்டி அரை நிர்வாணத்தில் பொதுமக்களை மிரட்டினர். இதையடுத்து, தொடர்ந்து எழுந்த பேச்சுவார்த்தைக்கு பின் திருநங்கைகள் பணத்தைக் கொடுத்து விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கவுண்டம்பாளையம் பகுதியில் திருநங்கைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். திருநங்கைகள் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி பணம் பறித்தும் வருகின்றனர். பொதுமக்கள் பலர் கூடியிருக்கும் பகுதியிலேயே தைரியமாக பணத்தைப் பறிக்கும் இந்த குறிப்பிட்ட சில திருநங்கைகள் இரவில் தனியாக வாகனத்தில் வரும் நபர்களை விட்டு வைப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், இரவு நேரங்களில் கவுண்டம்பாளையம் பகுதிகளில் உள்ள சாலைகளில் அலங்காரமாய் நிற்கும் திருநங்கைகள் இளைஞர்களை மடக்கி உடல் உறவுக்கு அழைத்து, பின்னர் அவர்களிடம் உள்ள பணங்களை பறித்து தப்பி ஓடுகின்றனர். இந்த சம்பவம் இங்கே தொடர்கதையாகி வருகிறது. ஆனால், துடியலூர் போலீசார் இதை கண்டும் காணாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநங்கைகளின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துடியலூரை சுற்றியுள்ள பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.