தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்துள்ளது.
தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வைகோ மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ மே 25ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடரந்து, இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள வைகோவின் மனுவை ஏற்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதிகளிடம் தண்டணையை சீக்கிரம் அறிவிக்கக் கோரி வைகோ கோரிக்கை வைத்ததாக வைகோ தெரிவித்துள்ளார். “தண்டனையைக் குறைக்கச் சொல்லி நான் சொல்லவில்லை. அதிகபட்ச தண்டனை கொடுங்கள். ஆயுள் தண்டனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன். தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிக் கொண்டேதான் இருப்பேன்,” என ஆவேசாமாக பேசினார்.