கோவை : கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக வால்பாறையில் 79 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக வால்பாறையில் 79 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அண்மையில் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையினால் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவின் அண்டை மாவட்டமான கோவையில் மழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, வால்பாறை பி.டி.ஓ. பகுதியில் 79 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவை கீழே காணலாம்.
வால்பாறை பி.டி.ஓ. (கோயம்புத்தூர்) 79 மி.மீ
கொட்டாரம் (குமரி) 62.4 மி.மீ
சின்கோனா ( கோயம்புத்தூர்) 58 மி.மீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 40 மி.மீ
வால்பாறை பி.ஏ.பி. (கோயம்புத்தூர்) 35 மி.மீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 34 மி.மீ
கன்னியாகுமரி (குமரி) 30 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி) 29 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி) 26 மி.மீ
தேவாலா (குமரி) 22 மி.மீ
நாகர்கோவில் (குமரி) 21 மி.மீ
மயிலாடி (குமரி) 20 மி.மீ
பெரியார் (தேனி) 16 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர்) 13.2 மி.மீ
தேக்கடி (தேனி) 12.4 மி.மீ
வல்லம் (தஞ்சாவூர்) , வேப்பூர் (கடலூர்) 11 மி.மீ
காட்டுமள்ளூர் (கடலூர்) 10 மி.மீ
எம்ரேல்டு (நீலகிரி), பூதப்பாண்டி (குமரி) 9 மி.மீ
தக்கலை (குமரி) 8.2 மி.மீ
பேச்சிப்பாறை (குமரி) 7.4 மி.மீ
ஜி பஜார் (நீலகிரி) 7 மி.மீ
குழித்துறை (குமரி) 6.6 மி.மீ
சிற்றாறு 1 (குமரி) 5.4 மி.மீ
சேலம் (சேலம்) 5.3 மி.மீ
கண்ணிமார் (குமரி) 5.2 மி.மீ
இரணியல் (குமரி) 4.6 மி.மீ
பெருஞ்சாணி (குமரி) 3.4 மி.மீ
குளச்சல், சுருளகோடு (குமரி) 3 மி.மீ
புத்தன் அணை (குமரி) 2.6 மி.மீ
தென்காசி (திருநெல்வேலி) 2.3 மி.மீ
பாபநாசம் , செங்கோட்டை (திருநெல்வேலி), நடுவட்டம் (நீலகிரி) 2 மி.மீ
ஆயிக்குடி (திருநெல்வேலி) 1 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 0.8 மி.மீ
இதேபோல, கேரள மாநிலத்ததில் பாலக்காடு 64. மி.மீட்டரும், கோழிக்கோடு 38 மி.மீட்டரும், திருச்சூர் 37 மி.மீட்டரும், பூக்கோட் 25 மி.மீட்டரும், கரிப்பூர் 22 மி.மீட்டரும், கோட்டயம் 14 மி.மீட்டரும், மட்டனூர் 13 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.