கோவை : மதுக்கரை அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து துணி வியாபாரிகளிடம் கொள்ளை அடிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான பைசல் மற்றும் மொய்தீன் ஆகிய இருவரும் துணி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், இவர்கள் கடந்த 3-ம் தேதி கோவை சொக்கம்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து துணிகளை கொள்முதல் செய்து கொண்டு காரில் கேரளா சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களின் காரை பின் தொடந்து சென்ற அடையாளம் தெரியாத சிலர் திடீரென காரை மறித்தனர். மேலும் தங்களை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட அவர்கள் காரில் சோதனை மேற்கொண்டனர். காரில் வெறும் துணி பண்டல்கள் மட்டும் இருந்த நிலையில், சோதனையிட்டவர்கள் மீது எழுந்த சந்தேகத்தால் காரில் இருந்த துணி வியாபாரிகள் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பொதுமக்கள் அந்த பகுதியில் கூடியதையடுத்து அதிகாரிகள் என கூறி கொள்ளையடிக்க வந்த நபர்கள் தப்பி ஓடினர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், கார் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தினர்.
அதேபோல, சம்பவம் நடைபெற்ற பகுதியான மதுக்கரை காவல் எல்லைக்கு உட்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட ஐந்து பேரை அடையாளம் கண்ட தனிப்படை போலிசார் அவர்களை கைது செய்தனர். மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார், விக்னேஷ், சதீஷ், வீரகுமார், ஸ்டாலின் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது பல குற்ற சம்பவங்கள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மதுக்கரை போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் எதற்காக துணி வியாபாரியின் காரை தடுத்து நிறுத்தி வருமான வரித்துறை அதிகாரி என மிரட்டி சோதனை செய்தனர்..? எனவும், இவர்களின் நோக்கம் என்ன..? எனவும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.