கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட வர்ஷினி பிரியாவை வளர்த்ததாக அவர்களுடைய பாட்டி தாத்தா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதால், இழப்பீட்டு தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் கனகராஜ் - வர்ஷினி பிரியா ஆகிய ஜோடிகளை கனகராஜ் சகோதரர் வினோத் என்பவர் சரமாரியாக வெட்டியதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வர்ஷினி பிரியாகோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரின் ஆணவக் கொலையை கண்டித்த பல்வேறு சமூக அமைப்புகள், அவர்களுக்கு நீதி வேண்டும் என்று அரசு வழங்கக்கூடிய சலுகைகள், அரசு வழங்கக்கூடிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வர்ஷினி பிரியாவின் உடலை தேசிய தாழ்த்தப்பட்டோர் துணை தலைவர் என். முருகன் நேரடியாக பார்வையிட்டு சமூக அமைப்பாளர்களிடமும், வர்ஷினி பிரியாவின் தாயிடமும் பேசினார்கள். அப்போது, அரசு வழங்கக்கூடிய நஷ்ட ஈட்டுத் தொகையான 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் காசோலையாக வர்ஷினி பிரியாவின் தாய் அமுதாவிடம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் வர்ஷினி பிரியாவை தாங்கள் தான் வளர்த்தவர்கள் என்று அமுதாவின் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.இதில் கடந்த 2008"ஆம் ஆண்டு அமுதா - ரங்கநாதன் என்பவருடன் திருமணம் முறிவு ஏற்பட்டதாக கூறியதுடன், வர்ஷினி பிரியாவை தாங்கள் தான் வளர்த்தோம் என்பதற்கு அப்பகுதியில் உள்ள மக்களின் கையெழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து உள்ளதாக அப்போது தெரிவித்தனர்.