கோவை : ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் ஆரோக்யா சித்த மருத்துவமனை இணைந்து ‘நலந்தானா’ - நலம் நம் கையில் எனும் ஆரோக்கிய தொடர் உரை நிகழ்ச்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.

கடந்த 1-ம் தேதி மாலை 6 மணிக்கு ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் துவங்கியது. ஜூலை 1 முதல் 7 வரை ஏழு நாட்களும் மாலை 6 மணிக்கு துறைசார் மருத்துவ நிபுணர்களின் உரைகள் நடைபெறும். அலோபதி மட்டுமல்லாமல் ஒருங்கிணந்த மருத்துவ முறைகளே இன்றைய தேவையாகின்றது. உடலும் உள்ளமும் நலம் பெறும் வகையில் மருத்துவர்கள் உரைகளை நிகழ்த்துகின்றனர்.
ஜூலை 1-ம் தேதி நடந்த துவக்கவிழாவில் கங்கா மருத்துவமனை இயக்குனர் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் ராஜ சபாபதி நலந்தானா நிகழ்ச்சியை துவக்கி வைத்து தலைமை உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது :-

இந்தியாவில் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு வெளிநாடுகளைக் காட்டிலும் சராசரி விகிதத்துக்கும் குறைவாக உள்ளது. நோய்கள் குறித்த தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அவசியமாகின்றது. நோய் வரும் முன் தெரிந்து வைத்திருந்தால் மட்டும் தான் அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது நமக்குத் தெரியும்.
இன்றைய சூழ்நிலையில் நலந்தானா போன்ற நிகழ்ச்சிகள் அவசியமாகின்றது. நோய்கள், விபத்துகள் குறித்த விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு தீ விபத்தில் சிக்கிக் கொண்டால் பதட்டமடைந்து ஒடக்கூடாது. தீ எப்போதும் மேல் நோக்கியே பரவும். ஆகவே கீழே படுத்துவிட வேண்டும். சேலையில் தீப்பற்றிக் கொண்டால் உடல் கூச்சத்தை விட்டுவிட்டு ஆடையை கழட்டி எரிய வேண்டும். தீ பற்றிய இடத்தில் உடனே தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். இது போன்ற எல்லா நோய்கள், விபத்துகள் குறித்தும் அடிப்படையான விழிப்புணர்வு, தகவல்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும், என்று பேசினார்.
புற்றுநோயை வெற்றி கொள்வோம் என்ற தலைப்பில் புற்றுநோய் மருத்துவர் எஸ்.ராஜசுந்தரம் உரையாற்றியதாவது :-

புற்று நோய் என்பது ஒரு உயிர்க் கொல்லி, கொடிய நோய் என்று மக்களிடையே தவறான புரிதல் உள்ளது. மேலும் புற்று நோயைக் காட்டிலும் அதன் மருத்துவமுறைகள் கொடூரம் என்று நம்பப்பட்டு வருகிறது. இந்த எண்ணங்களில் இருந்து மக்கள் வெளி வரவேண்டும். புற்றுநோய் ரொம்ப கொடூரமாக இருந்த காலகட்டங்கள் என்றோ மறைந்து விட்டது. இன்று புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த மருத்துவம் பெற்று பல ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ஏராளம். புற்று நோய் வந்துவிட்டால் பயப்படாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். உடலில் எந்த மாற்றங்கள் தென்பட்டாலும் அதற்குரிய மருத்துவரை முன்கூட்டியே அனுகவேண்டும். பெரும்பாலானோர் யாரும் இதைச் செய்வதில்லை. குறிப்பாக பெண்கள், தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், தொந்தரவுகள் இருந்தால் அது குறித்து ஆரம்பகட்டத்திலேயே தயக்கம் மற்றும் குடும்பம் காரணமாக வெளியில் சொல்வதேயில்லை. கடுமையான வலி வந்த பிறகே மருத்துவம் பார்ப்பார்கள். ஆகவே ஆரம்பகட்டத்திலேயே பரிசோதனைகள் செய்து மருத்துவத்தினை துவங்க வேண்டும். தலைமுடி, நகம் தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் புற்று நோய் வரலாம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் வருடத்துக்கு ஒரு முறை மெமோகிராம் செய்து கொள்ள வேண்டும். பரிசோதனைகளுக்கு நிறைய செலவாகுமே என்று நினைப்பவர்களே ஏராளம். வார விடுமுறை நாளில் உணவகத்துக்கு செலவழிக்கும் தொகை கூட பரிசோதனைக்கு செலவாகாது.
புற்றுநோய்க்கான மருத்துவ முறைகளும் பல வந்துவிட்டன. அறுவை சிகிச்சைகள், ரேடியோ தெரபி, கீமோ தெரபி, இம்யூனோதெரபி, ஒருங்கிணைந்த மருத்துவமுறைகள் உள்ளிட்டவை. கீமோதெரபியிலும் இப்போது பல நவீன தொழில்நுட்ப மருத்துவமுறைகள் வந்துவிட்டன. இதனால் முடி கொட்டுவது தற்காலிகம் தான். பின்பு திரும்பவும் முடி வளரும். புற்றுநோய் வரக் காரணம் 50 சதவிகிதம் புகை மற்றும் மதுப்பழக்கம் தான். அடுத்து சுற்றுச்சூழல் மாசு, பிளாஸ்டிக், உணவுப் பழக்கவழக்கங்களால் வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு குடும்பத்தினர், நண்பர்களின் அன்பும் அரவணைப்பும் தரவேண்டும். நோயாளிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பார்கள். சீரான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, நல்ல உணவு முறை, மூச்சுப்பயிற்சி இருந்தால் புற்று நோயில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். மேலும் புற்று நோய் என்பது இதர நோய்களைக் காட்டிலும் எளிதில் குணப்படுத்தக் கூடியதே. நோய் குறித்த பயத்தினை உதரித்தள்ள வேண்டும், என்று பேசினார்.