கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-மாற்றுத்திறனாளிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் இரண்டு மாதத்திற்கு 6 முறை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 9-ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இக்குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.