கோவை : பொள்ளாச்சி ராமு கலை அறிவியல் கல்லுரியில் வரும் 6-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
கோவை : பொள்ளாச்சி ராமு கலை அறிவியல் கல்லூரியில் வரும் 6-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடூவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வண்ணம் வரும் 06-ம் தேதியன்று வால்பாறை மெயின் ரோடு பொள்ளாச்சி ராமு கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழில்கல்வி பயின்றவர்கள், ஐ.டி.ஐ. படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் மேலும் இதுபோன்ற அனைத்து கல்வித் தகுதி உடைய ஆண்/பெண் இருபாலருக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளார். இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பலருக்கு எந்தவித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இந்நிகழ்ச்சி மூலம் வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தொடர்ந்து தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.